Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, 12 February 2013

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 1,71,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (7,50,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 5,00,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.

பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.

உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 5,00,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த 5,00,000 சொற்கள் பிரப்பிலக்கணத்தோடு வகைப்படுத்தப் பட்டு உள்ளது. அதன் சொற் பொருட்களை கணக்கில் கொண்டால் பத்து இலட்சங்களைத் தாண்டி விடும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 28 January 2013

Pen Drive


விரலி என்பது எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இக்கருவியை ஆங்கிலத்தில் Pen Drive என்று அழைப்பர். தமிழர்களும் இக்கருவியை பென் டிரைவ்என்று எழுதுவது வழக்கம். இருப்பினும் இக்கருவிக்கான சரியான தமிழ்ச் சொல் விரலி என்பதே ஆகும்.



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 22 January 2013

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்


வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:


பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 20 January 2013

தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.


தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .

இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .

சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் .

சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.

லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .

கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது











இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 8 January 2013

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
========================================
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

!!~ இராஜேந்திரன்
தமிழரசு ~!!

பகிரவும் தமிழ் நண்பர்களே.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 30 December 2012

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்


இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

ஆங்கிலம்----- முடியாது
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!

நன்றி : வீரத்தமிழன்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 18 December 2012

தமிழர்களின் கட்டிடக்கலை

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்கள
ை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி 
மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம் !தேடல் தொடரும்...

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.
























இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 5 December 2012

பழங்களின் தமிழ்ப்பெயர்கள்


"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்"

A - வரிசை
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

B - வரிசை
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

C - வரிசை
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

D - வரிசை
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

E - வரிசை
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்

F - வரிசை

G - வரிசை
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்

H - வரிசை
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி

I - வரிசை

J - வரிசை
JACKFRUIT - பலாப்பழம்
JAMUN FRUIT - நாவல்பழம்

K - வரிசை
KIWI - பசலிப்பழம்

L - வரிசை
LYCHEE - விளச்சிப்பழம்

M - வரிசை
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி

N - வரிசை


O - வரிசை
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்

P - வரிசை
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்

Q - வரிசை
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

R - வரிசை
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

S - வரிசை
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்

T - வரிசை
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்

U - வரிசை
UGLI FRUIT - முரட்டுத் தோடை

V - வரிசை

W - வரிசை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE - விளாம்பழம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 31 October 2012

மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்


மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்

மருத்துவர் கா. கணசேன் அரியலூரில் தமிழ் அன்னை மருத்துவமனை நடத்தி வருகிறார் . ஆங்கில வழி மருத்துவமுறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1968 ல் படித்து முடித்தவர் இவர் . தற்போது இவருக்கு வயது 71 . மருத்துவராக இருந்தாலும் தமிழ் மீது அதீத பற்று கொண்ட இவர் தன்னுடைய மருத்துவ சீட்டையே தமிழில் எழுத துவங்கி உள்ளார் என்றால் பாருங்கள
ேன் . ஏறத்தாள 17 ஆண்டுகளாக இவர் தமிழ் மொழியில் தான் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தமிழில் பேசுமாறு அறிவுறுத்துகிறார். ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார் . இவரிடம் வரும் நோயாளிகளும் இவரிடம் தூய தமிழ் மொழியிலேயே உரையாடுகிறார்கள். மருந்து சீட்டில் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஏற்படும்படியான வாசகங்களை எழுதி உள்ளார் .

தமிழன் நீ என்றால் ஆங்கில கலப்பின்றி இனிய தமிழில் பேசு ' போன்ற வாசகங்களை எழுதியிள்ளார் .

தன்னுடைய மருத்துவ பட்டப் படிப்பையும் தமிழில் மொழி பெயர்த்து சுருக்கியும் எழுதி உள்ளதை பார்க்கலாம் . மேலும் தமிழர்களின் தி. பி. திருவள்ளுவர் ஆண்டையும் எழுதுகிறார் . கிபி ஆண்டையும் குறிப்பிடுகிறார் . தமிழ் ஆண்டையும் தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு எழுதும் உலகில் ஒரே மருத்துவர் இவராகத் தான் இருப்பார்.

மேலும் ஆங்கில மருத்துகளை தமிழில் எழுதும் போது ஒலி அளவில் வேறுபாடு வரும் . இதனால் மருந்து வழங்குவோருக்கு குழப்பம் ஏற்படும் . அக் குழப்பத்தை நீக்கும் வகையில் மருந்து சீட்டில் இடது புறத்தில் ஆங்கில ஓசைக்கு நிகரான தமிழ் வரி வடிவத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார். இப்படியான தமிழ் பற்று உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று நாம் கேட்கையில் , அவர் 'எனக்கே தெரியவில்லை தமிழ் பற்று எனக்கு இப்போது முற்றிவிட்டது' எனக் கூறினார். அருகில் உள்ள ஸ்டார் மொபைல் என்ற அலைபேசி கடைக்கு விண்மீன் கைபேசியகம் என்று தமிழ் பெயராக மாற்றுமாறு அறிவுரை செய்துள்ளார் .

யாரை பார்த்தாலும் தூய தமிழில் உரையாட வலியுறுத்துகிறார். 'தமிழா நீ தமிழில் பேசு' என்ற நூலையும் இப்போது வெளியிட உள்ளார் இவரை போன்ற சிறந்த மொழிப் பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு என்றுமே அழிவில்லை என்பது மட்டும் உறுதி. மருத்துவத்துறையில் ஆங்கிலம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என நினைபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் . தமிழ் மொழியை மருத்துவத்துறையில் வளர்க வேண்டும் . இவருக்கு சிறந்த தமிழ் பற்றாளர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்க தமிழர் பண்பாட்டு நடுவம் முடிவு செய்துள்ளது. விரைவில் மருத்துவர் கணேசன் அவர்களின் படத்தை வெளியிடுகிறோம் . வாழ்க தமிழ் !
மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்

மருத்துவர் கா. கணசேன் அரியலூரில் தமிழ் அன்னை மருத்துவமனை நடத்தி வருகிறார் . ஆங்கில வழி மருத்துவமுறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1968 ல் படித்து முடித்தவர் இவர் . தற்போது இவருக்கு வயது 71 . மருத்துவராக இருந்தாலும் தமிழ் மீது அதீத பற்று கொண்ட இவர் தன்னுடைய மருத்துவ சீட்டையே தமிழில் எழுத துவங்கி உள்ளார் என்றால் பாருங்கள
ேன் . ஏறத்தாள 17 ஆண்டுகளாக இவர் தமிழ் மொழியில் தான் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தமிழில் பேசுமாறு அறிவுறுத்துகிறார். ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார் . இவரிடம் வரும் நோயாளிகளும் இவரிடம் தூய தமிழ் மொழியிலேயே உரையாடுகிறார்கள். மருந்து சீட்டில் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஏற்படும்படியான வாசகங்களை எழுதி உள்ளார் .

தமிழன் நீ என்றால் ஆங்கில கலப்பின்றி இனிய தமிழில் பேசு ' போன்ற வாசகங்களை எழுதியிள்ளார் .

தன்னுடைய மருத்துவ பட்டப் படிப்பையும் தமிழில் மொழி பெயர்த்து சுருக்கியும் எழுதி உள்ளதை பார்க்கலாம் . மேலும் தமிழர்களின் தி. பி. திருவள்ளுவர் ஆண்டையும் எழுதுகிறார் . கிபி ஆண்டையும் குறிப்பிடுகிறார் . தமிழ் ஆண்டையும் தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு எழுதும் உலகில் ஒரே மருத்துவர் இவராகத் தான் இருப்பார்.

மேலும் ஆங்கில மருத்துகளை தமிழில் எழுதும் போது ஒலி அளவில் வேறுபாடு வரும் . இதனால் மருந்து வழங்குவோருக்கு குழப்பம் ஏற்படும் . அக் குழப்பத்தை நீக்கும் வகையில் மருந்து சீட்டில் இடது புறத்தில் ஆங்கில ஓசைக்கு நிகரான தமிழ் வரி வடிவத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார். இப்படியான தமிழ் பற்று உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று நாம் கேட்கையில் , அவர் 'எனக்கே தெரியவில்லை தமிழ் பற்று எனக்கு இப்போது முற்றிவிட்டது' எனக் கூறினார். அருகில் உள்ள ஸ்டார் மொபைல் என்ற அலைபேசி கடைக்கு விண்மீன் கைபேசியகம் என்று தமிழ் பெயராக மாற்றுமாறு அறிவுரை செய்துள்ளார் .

யாரை பார்த்தாலும் தூய தமிழில் உரையாட வலியுறுத்துகிறார். 'தமிழா நீ தமிழில் பேசு' என்ற நூலையும் இப்போது வெளியிட உள்ளார் இவரை போன்ற சிறந்த மொழிப் பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு என்றுமே அழிவில்லை என்பது மட்டும் உறுதி. மருத்துவத்துறையில் ஆங்கிலம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என நினைபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் . தமிழ் மொழியை மருத்துவத்துறையில் வளர்க வேண்டும் . இவருக்கு சிறந்த தமிழ் பற்றாளர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்க தமிழர் பண்பாட்டு நடுவம் முடிவு செய்துள்ளது. விரைவில் மருத்துவர் கணேசன் அவர்களின் படத்தை வெளியிடுகிறோம் . வாழ்க தமிழ் !

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 29 October 2012

எந்த மொழியிலும் இல்லாத எண்கள் !!


தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத எண்கள் !!!!!!!
இவ்வளவு எண்கள் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்.......

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 5 September 2012

தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல்


குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடுதல் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பல நேரங்களில் பெயர்களை தேடி அலையும் நிலை வந்துவிடுகிறது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீனம் இப்போது அவசியமாகிவிட்டாலும், இன்னும் தாய் மொழி பற்று தவறிவிடவில்லை.

என் உறவினர் ஒருவரின் பெயர் இமையன். நெடுங்காலமாக அந்த பெயர் சொல்லி தான் அழைப்போம். பிறகு ஒருநாளில் தெரிந்தது அது இமயவரம்ப நெடுசேரலாதன் எனும் பெரும்பெயரின் சுருக்கம் என்று. வியப்புதான். இத்தனை பெரும் பெயரை கொண்டு அவர் இயங்குவது. இது போல பெரும் நீளமான பெயர்களை இப்போது மக்கள் விரும்புவதில்லை. பாஸ்போட் போன்ற விண்ணப்ப படிவங்களில் அதிகபட்சம் 13 எழுத்துகளே பெயருக்காக தரப்படுகின்றன. அயல்நாடுகளில் இருக்கும் பெயருக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இவைகளுக்கு ஏனோ நாமும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அழகாகவும், சிறியதாகவும், கருத்தாளம் மிக்கதாகவும் வைக்க விரும்புகின்றவர்களுக்காக நிறைய புத்தகங்கள் வருகின்றன. பலவற்றில் சிறப்பான பெயர்கள் எதுவும் இருப்பதில்லை என்ற போதும், எளிய விலையில் கிடைக்கின்ற என்பதற்காக நாம் வாங்குகிறோம். அந்தக் கவலை இந்த புத்தகத்தில் இல்லைஆண்களுக்கான பெயர்கள், பெண்களுக்கான பெயர்கள் என தனித்தனியாக உள்ளன.

அத்துடன் வாகணங்களுக்கு தமிழக அரசு விதிப்படி தமிழிலிலேயே எண்களை எழுதலாம் போன்றவைகளும்,. வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்வைக்க ஆலோசனையும் சொல்லப்பட்டுள்ளது.





ஆசிரியரை தொடர்பு கொள்ள -

மா.தமிழ்ப்பரிதி
9382854321
tparithi@gmail.com

நன்றி,.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 2 September 2012

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..!!!


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)


எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

நன்றி: தமிழர் கணிதம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்