இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
SMS IN படித்ததில் பிடித்தது Headline Animator
எனக்கு பிடித்த பாடல்
Sunday, 4 August 2013
எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!
Tuesday, 26 February 2013
உங்களுக்கு தெரியுமா..?
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Thursday, 21 February 2013
அறிய வேண்டிய தகவல்கள்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Wednesday, 20 February 2013
தெரிந்து கொள்வோம் வாங்க....
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Friday, 15 February 2013
உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அறிவியல்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 10 February 2013
கலைகளின் வகைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
அரிய சுவையான தகவல்கள்-2
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
அரிய சுவையான தகவல்கள்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Wednesday, 6 February 2013
பொது அறிவு-2
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Saturday, 15 December 2012
சில பொது அறிவுத் தகவல்கள்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 9 December 2012
அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்
1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.
8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.
இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :
1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா
3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து
4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து
6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு
7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு
9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Monday, 3 December 2012
தக்காளி பற்றிய தகவல்
இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம், பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்பத் தன்மை தருகிறது.
இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக்கூடியது.
மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலும், இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.
சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.
சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.
தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.
கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.
தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.
மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.
இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கிறன.
இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.
தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.
கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னீசியம் சிமெண்ட்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.
குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.
அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.
வைட்டமின் சி குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் சி தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.
மற்றும் வைட்டமின் பியும் சியுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கூட இருக்கிறது.
தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 2 December 2012
பூக்களால் குணமாகும் சில நோய்கள்
1.தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
2.ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பபாகவும் இருக்கலாம்.
3.வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
4.ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.
5.மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
6.தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.
7.தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும்.
8.ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம்கூடும்.
9.செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும்.
10.மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
11.வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமைபெறும்.
12.உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட உஷ்ணபேதி குணமாகும்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
பொது அறிவு 1
1. ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம்.
2. புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன.
3. வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.
4. பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன.
5. கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது.
6. குரங்கில் 600 வகைகள் உள்ளன.
7. பெண் குயில் பாடாது.
8. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள்.
9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.
10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி.
11. "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.
12. இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல்.
13. உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.
14. ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'.
15. டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'.
16. திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'.
17. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'.
18. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'.
19. கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'.
20. நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி.
21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.
22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.
23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.
24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.
25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.
26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.
27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.
28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.
29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.
30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.
31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.
32. இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.
33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.
35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Wednesday, 28 November 2012
வியந்து தான் போவீர்கள் - 1
1.நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
2.சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
3.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
4.நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
5.கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
6.மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
7.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
8.மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று
9.பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
10.உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
11.ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
12.பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
13.பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
14.நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
15.நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
16.யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
17.ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
18.தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
19.முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
20.தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Monday, 26 November 2012
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது
எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
-Sasi Dharan-

Friday, 16 November 2012
உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....
...
என்னப்பா இது கரென்ட் இல்லை, இன்வெர்ட்ட்டர் பால் இல்லாத குழந்தை போல கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்க
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்