Showing posts with label வைட்டமின். Show all posts
Showing posts with label வைட்டமின். Show all posts

Tuesday, 22 January 2013

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Monday, 3 December 2012

தக்காளி பற்றிய தகவல்

 தக்காளி பற்றிய தகவல்...

இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம், பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாயவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்பத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக்கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலும், இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கிறன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னீசியம் சிமெண்ட்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

வைட்டமின் சி குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் சி தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

மற்றும் வைட்டமின் பியும் சியுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.
 
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Tuesday, 23 October 2012

உயிர்சத்து வைட்டமின் ‘D’ ஏற்படும் நோய்கள் மற்றும் பயன்கள்

உயிர்சத்து வைட்டமின் ‘D’ ஏற்படும் நோய்கள் மற்றும் பயன்கள்

உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது. உடல
ுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.

இந்த உயிர்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலுக்கு மிகவும் முக்கியமான உயிர்சத்தான வைட்டமின் ‘ஈ’ பற்றி அறிந்து கொள்வோம்.

வைட்டமின் ‘D’

மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.

வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது. அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.

வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘ஈ3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

· எலும்புகளை பலப்படுத்தும்

· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.

· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.

· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.

· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.

· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.

· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்

பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘ஈ’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்

வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும். இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.

பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன. இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்

ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.

தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.

கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல். கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்

வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும்
புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமி
ன் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளை தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்தினை உட்கொள்ளுவதன் மூலம் விரட்ட முடியும். எப்படி? வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கும் பால், முட்டை, மஞ்சள் கரு, வெண்ணெய், மாம்பழம், பப்பாளிப்பழம், பேரிக்காய், பலாப்பழம், ஆரஞ்சு, தக்காளிப்பழம், பச்சை கேரட் ஆகியவற்றை உண்டாலே போதும். இவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது.
சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளு பவர்கள் இனி கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது. ஆமாம் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தால் போதும் 25 மில்லி கிராம் வைட்டமின் சி யை சிகரெட் எடுத்துக் கொள்கிறது. தினமும் உணவில் அதிகமாகப் புரதச் சத்து உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்பவர்கள் வைட்டமின் சி யையும் அதிகம் சேர்க்க வேண்டும். புரதச்சத்து உடலில் அதிகரிக்கும்போது வைட்டமின் சி தேவையும் அதிகரிக்கிறது.
அதற்குத் தகுந்தாற்போல் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளைச் சேர்கக வேண்டும். வைட்டமின் சி குறைவால் உள்காயங்கள், பலவீனமான எலும்பு, பல், ஈறு நோய்கள், சோம்பேறித்தனம், களைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருக்கும் தினம் 400 மில்லி கிராம் வைட்டமின் சி தேவை. இது கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளிப் பழம், சாத்துக்குடி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது.
நாம் அதிகம் கவலைப் படாத ஒரு வைட்டமின் என்றால் நிச்சயம் அது வைட்டமின் ஈ-யாகத்தான் இருக்கும். உண்மை யில் வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும். இந்து இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுவாக்குகிறது.
வைட்டமின் ஈ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். ரத்தம் உறையாமை நோய் உள்ளவர்கள் வைட்டமின் ஈ உணவு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. அப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பட்டாணிக்கடலை, கோதுமை, ரவா, புழுங்கலரிசி, முட்டை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
புகைப்படம்: வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும்
புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன. 