Tuesday, 23 October 2012

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்துப் பேசவேண்டும் 
2) உண்மையே பேசவேண்டும் 
3) அன்பாகப் பேசவேண்டும். 
4) மெதுவாகப் பேசவேண்டும் 
5) சமயம் அறிந்து பேசவேண்டும் 
6) இனிமையாகப் பேசவேண்டும் 
7)அதிகம் பேசாதிருக்கப் பழக வேண்டும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்:-

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல்
 நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்
புகைப்படம்: வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்:-

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

தெரியாது - முடியாது - கிடையாது

தெரியாது -  முடியாது -  கிடையாது. 

1.உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

2.குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
3.செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத்  தெரியாது. 

4.ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.

5.மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம
முடியாது.
6.பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க  முடியாது. 

7.எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க  முடியாது. 

8.வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி
கிடையாது.
9.பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை  கிடையாது.
10.கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது  கிடையாது. 

11.சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி  கிடையாது.
12.இசை மேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு  கிடையாது. .
13.வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள்  கிடையாது.
14.நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு  கிடையாது.
15.இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும்  கிடையாது.
16.பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி 
கிடையாது.

17.ஆப்கானிஸ்தானில் ரயில்கள் 
கிடையாது.

18.ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து 
கிடையாது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

வாழும் வழி THIRTY TIPS (படித்ததில் பிடித்தது)

வாழும் வழி THIRTY TIPS (படித்ததில் பிடித்தது):-

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Monday, 22 October 2012

தயவு செய்து குடிக்காதீர்கள்

தயவு செய்து குடிக்காதீர்கள் ..குடித்து உங்களை அழிக்காதீர்கள் என குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சும் முதியவர் .
நன்றி :விகடன்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன ?

டெங்கு காய்ச்சல் : 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் சென்னையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்த
ின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மக்களிடையே பெரும் அச்சமும்,பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் திடீரென வந்த ஒன்றல்ல. கடந்த ஏப்ரல் மே மாதங்களிலேயே நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போதே கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தவறியதன் விளைவாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவத் தொடங்கியது...
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும்..
அறிகுறிகள் என்ன ?

டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.
முதல் உதவி :-

”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம்” என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்...........
மொத்தத்தில், வீட்டில் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...!
அன்புடன் தேடல்...!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Sunday, 21 October 2012

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது எப்படி ?

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது எப்படி ?

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீ
க்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.

முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பார்க்க முடியாது. கீறல்கள் சிறியதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.

வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.

பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.

அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

நன்றி : பைசல் முஹம்மது
புகைப்படம்: பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது எப்படி ?

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.