இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
SMS IN படித்ததில் பிடித்தது Headline Animator
எனக்கு பிடித்த பாடல்
Sunday, 28 April 2013
Tuesday, 23 April 2013
எளிதாக ரத்ததானம் செய்ய/பெற
இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.
இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும்.
உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள்
நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம்
அவர்களை தொடர்பு கொள்ள இயலும்.
இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search /
Blood Request Widget (http://bloodhelpers.com/widgets )
கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை
கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது,
SMS அனுப்பியோ
தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க
வேண்டும். அவ்வளவே.
முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம்
தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும்.
BloodDonors ( http://www.blooddonors.in/ )
தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி
விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை
என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும்.
மற்ற சில தளங்கள்:
இதை போல இணையத்தில் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கமெண்ட்டில்
சொல்லலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 31 March 2013
சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்
சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்
1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள்
என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில்
அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால்
ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/
பார்க்கவும்.
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல்
1098
இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும்
குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும்
குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற 9842062501
& 9894067506
என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள்
ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது
தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட
நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும்
வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து
தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக
ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட
வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த
வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம்
உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை
பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க
முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண
வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க
முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின்
சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம்
நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி
கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை
இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது.
மேலும் விபரங்கள் பெற 9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப்
புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில்
இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Saturday, 16 March 2013
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது
சுவாரஸ்யமான ஒன்றே.
- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.
- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)
- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில்
பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.
- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.
- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர்
வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.
- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.
- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.
- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்)
என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.
- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.
- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.
- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ
மாம்பலமாகி விட்டது.
- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.
- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.
- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)
- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.
- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.
- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.
- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.
- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.
- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.
- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.
- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.
- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Sunday, 10 March 2013
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)
நண்பர்களே.! இதைக் கண்டிப்பாக இரண்டு நிமிடம் ஒதுக்கிப் படிக்கவும்.
குறிப்பாகப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புகார் எண்: 044-25353999
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் குறித்து
இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)
அரக்கோணம்- கடற்கரை, தாம்பரம்- கடற்கரை, வேளச்சேரி- கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை
மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெண்
போலீசார் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர்
கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் 'ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் புகார் செய்ய உதவி
மையம் 24
மணி நேரமும் செயல்படுகிறது.
இந்த புகார் மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் இருப்பார்கள். அதற்குப்பிறகு
கட்டுப்பாட்டு அறை போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு
கொண்டு பயணத்தின்போது தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்'
என்று
கூறியுள்ளார்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Thursday, 7 March 2013
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
எச்சரிக்கை...!
C.F.L .பல்புகள் உடைந்தால்...!
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு
வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால்
இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக
விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ ,
மைக்ரேன் தலைவலி ,
மூளை பாதிப்பு ,
உடல் அசைவுகள் ,
பாதிக்கப்பட்டு
நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும
பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில்
ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக்
கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் ,
அது உள்ளே
ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற
அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால்
சுத்தப்படுத்தலாம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , '
சீல் ' செய்யவும் . சாதாரண
குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக
அப்புறப்படுத்தி விடுவார்கள் .
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Thursday, 28 February 2013
பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் – எச்சரிக்கை
பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் – எச்சரிக்கை
அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS)
இருக்கின்றனவா என
ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும்
பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216,
E234, E252, E270, E280,
E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431,
E432, E433, E434,
E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476,
E477, E478, E481,
E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572,
E631, E635,
E904.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் –
வெட்கம்
அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள்
தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது
என்பது மற்றுமொறு செய்தி.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Subscribe to:
Posts (Atom)
