Tuesday 16 August 2011

விண்டோஸ் 7 Service Pack 1யை ISO கோப்பாக தரவிறக்கம் செய்ய


மைக்ரோசாப்டின் இயங்க்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணினிபயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும். இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009 ம்  வருடம் அக்டோபர் 22 தேதி சந்தைக்கு வந்தது. இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி, விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011 ல் வெளியானது. இந்த மீள்பதிப்பை தற்போது ISO பைலாகவும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய:-


Windows 7 Home Premium x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Home Premium x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Professional x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Professional x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Ultimate x86 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

Windows 7 Ultimate x64 SP1 ISO வினை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த ISO பைலை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு பூட்டபிள் பைலாக மாற்றிக்கொள்ளவும். பின் நீங்கள் வழக்கம் போல் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் இயங்குதளங்கள் 30 நாட்கள் இயங்க கூடியதாக மட்டுமே இருக்கும். இதனை முழுமையாக இயங்க செய்ய, ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

லைசன்ஸ் கீயை தரவிறக்க சுட்டி

லைசன்ஸ் கீயை தரவிறக்கம் செய்து முழுமையாக இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே இலவசமாக பெறுவீர்கள். என்ன ஒன்று இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும். இது ஒரு அரிய வாய்ப்பாகும் இதை நழுவ விடாதீர்கள்.
                                                               நன்றி
                            tamilcomputerinfo

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday 8 August 2011

பாஸ்வேர்ட்களை இலகுவாககையாள பாதுகாப்பான மென்பொருள்

இணையத்தில் அதிகளவு அதிகளவு கணக்குவைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொன்றிற்கான பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்திருப்பது மிகவும் கஷ்டமாகும்.


இந்த Any Password என்ற மென்பொருள் மூலம் உங்கள் அனைத்து இணையக் கணக்குகளுக்கான பாஸ்வேர்ட்களையும் ஒன்றாகசேமித்துவைத்து மொத்தமாக Master Password ஒன்றினை Set செய்திடமுடியும். இம் மென்பொருள் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்களை Folder மூலம் வகைப்படுத்தி இலகுவாக சேமித்திடலாம்.


முதலில் Any Password மென்பொருளை Open செய்யவும். தோன்றும் விண்டோவில் My Passwords என்னும் பகுதியில் Right Click செய்து தோன்றும் Menu வில் Add Password என்பதை Click செய்யவும் Folder களில் இட்டு சேமிக்க விரும்பினால் Add Folder என்பதை Click செய்யவும்.


Add Password என்பதை Click செய்ததும் வலது பக்கத்தில் User Name/Account என்ற இடத்தில் உங்கள் User Name இனையும், Password என்ற இடத்தில் Password இனையும் வழங்கவும்.

URL/File/Program என்ற இடத்தில் கணக்கு உள்ள தளத்தின் முகவரியினையும் இடவும், Comment என்ற இடத்தில் தளம் பற்றிய ஏதாவது கருத்தினை இடவும். இறுதியாக Save Button இனை அழுத்தி Save செய்திடவும். மறக்காமல் Save செய்ய முன் File Menu வில் உள்ள Master Password இனை Click செய்து Master Password இனை Set செய்த்திடவும்.
 

இனி நீங்கள் Save செய்த File இனை Open செய்யும்போது Master Password இனைவழங்கி உங்கள் கணக்குகளுக்கான Password இலகுவாக Copy Button இனை அழுத்துவதன் மூலம் Copy செய்து தேவைப்படும் இடங்களில் Past செய்துகொள்ளலாம்.

மென்பொருளை டவுன்லோட் செய்திட இங்கு கிளிக் செய்யவும்


                                        நன்றி
             dailypcnews வலைத்தளம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



நம் மூளையின் வயது என்ன?

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டு பிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இதன் முகவரி http://www. freebrainagegames.com/. இந்த தளம் சென்று, இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி (விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும், போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன; அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
அடுத்த பிரிவு அடென்ஷன் (Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு மொழி (Anagrams) : எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான் காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.
இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப் படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.
ஒருமுறை விளையாடிப் பார்த்தால், நிச்சயம் மூளைத்திறன் உயரும் என்று எண்ணுகிறேன்.
                                  நன்றி
            கம்ப்யூட்டர் மலர்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பெற்றோர்கள் மன்னிக்கவும்

கொன்றைவேந்தன்-2011

அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு
ஆலய வாசலில் தாவணி பாரு
இங்கிலீஷிலே எப்பவும் பேசு
ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு
உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி
ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி
எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு
ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை
ஐ லவ் யூவென சொல்லிப் பழகு
ஒவ்வொருநாளும் சட்டை மாற்று!
ஓஹோவென்று ஃபிகரைப் புகழ்
ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள்
அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை
கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
காசில்லார்க்குக் காதலி இல்லை
கிண்டல் செய்வது மாணவர்க்கழகு
கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு
குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு
கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு
கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை
கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு
கைபேசி மாடலை அடிக்கடி மாற்று
கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசு
கோபம் வந்தால் வீட்டிலே காட்டு
கௌபாய் போல ஊரை சுற்று
சத்யம் தியேட்டர் சாலவும் நன்று
சாகிறவரைக்கும் மொக்கை போடு
சிகரெட் பிடித்தால் மறைந்து ஊது
சீறும் பல்சரை தினசரி ஓட்டு
சும்மாயிருந்தால் கவிதை எழுது
சூடும் சொரணையும் காதலர்க்கில்லை
செல்போன் ரிங்டோன் அடிக்கடி மாற்று
சேரும் நண்பர்கள் ஜேப்பைக் கவனி
சைட்டடிப்பதற்கு கூலிங்-கிளாஸ் போடு
சொட்டைத்தலையில் தொப்பியை அணி
சோதாநண்பர்கள் உடன்வரும் சனி
தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை
தாய் ரிமோட் எடுத்தால் நெடுந்தொடர் தொல்லை
திரைப்படப்பாட்டைத் தினசரி ஓது
தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
துட்டுள்ளவரை தான் உடன்வரும் நட்பு
தூக்கம் வரும்வரை எஃப்.எம்.கேளு
தெளிவுடையோரைத் தூர விலக்கு
தேடிப்போனால் பாட்டியும் முறைப்பாள்
தைத்ததை விடவும் ரெடிமேட் நன்று
தொலைந்த செல்போன் திரும்ப வராது
தோழனுடன்போய் ஜொள்ளுதல் தீது
நமீதா நாமம் நயம்பட உரை
நான்கில் ஒரு ஃபிகர் நிச்சயம் தேறும்
நித்தம் செல்லை டாப்-அப் பண்ணு
நீள எஸ்.எம்.எஸ். அனுப்புதல் தவிர்
நுரைவரும் பீரை வெயிலில் பருகு
நூல்விடாமல் ஃபிகர் கிடைக்காது
நெட்டை ஃபிகரும் ஒட்டடைக்கு உதவும்
நேரம் கிடைத்தால் பாடமும் படி
நையப்புடைப்பது அப்பா கடமை
நொண்டிச்சாக்கு தினசரி புகல்
நோட்டில்லேன்னா கேட்டுக்கு வெளியே!
படங்கள் தனியாய்ப் பார்ப்பது பாவம்
பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து
பில்லியன் சீட்டிற்கு ஃபிகரே பெருமை
பீஸைத் தின்றால் ஹால்-டிக்கெட் இல்லை
புத்தகம் இருப்பது ஃபோட்டோ வைக்க
பூசை என்பது தண்ணியடித்தல்
பெண்கள் காலேஜ் புண்ணியதீர்த்தம்
பேசிக்கொல்வது பெண்டிர் இயல்பு
பையனைப் போலே பல்லைக்காட்டாதே
பொதுவிடம் என்றால் முதுகில் கவனம் வை
போன செமஸ்டர் திரும்ப வராது
மன்மதக்குஞ்சு நீயென்றுணர்
மாமிகள் நட்பு ஆபத்துக்குதவும்
மிஞ்சும் பெண்ணிடம் கெஞ்சுதல் நன்று
மீட்டர் இல்லா ஆட்டோ காதல்
முற்பகல் காட்சியை முதல்நாள் பாரு
மூன்றாண்டில் டிகிரி முடிப்பவன் மேதை
மென்ட்டல் என்பவன் தினசரி படிப்பவன்
மேட்னி போகக் கூட்டணி சேரு
மையிடும் பெண்கள் பழையபஞ்சங்கம்
மொறைக்கிற பெண்ணைத் துரத்துதல் தவிர்
மோட்சம் அளிப்பது ஃபிகரின் புன்னகை
வண்டியிருப்பது ஊர் சுற்ற உதவும்
வாட்டமளிப்பது கோடை விடுமுறை
விடாமல் தொடரும் வித்தையில் தேறு!
வீட்டுக்குப் போனால் விழுந்திடும் உதை
உடான்ஸ் விடுகையில் கவனம் தேவை
ஊக்கம் தருவது ஓரக்கண் பார்வை
வெட்டிப்பொழுதில் வெளியே திரி
வேஸ்ட் எனப்படுவது ஃபிகர்களில் இல்லை
வைதிடும் பெண்ணைக் கைதொழுதிடு
ஒரு ஃபிகர் இருக்க மறு ஃபிகர் தவிர்
ட்டைவாய்நண்பனை ஒதுக்கிடல் நன்று
         நன்றி
                  cheena (சீனா)

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 7 August 2011

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!

 டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:
1.6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின்
கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு..முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி..டி காலனியில்9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு..ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி' அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு..தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்' மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு..தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்' மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி. 35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்' மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்' என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்' என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
 67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை' - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். - இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.
  

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்