Wednesday 7 September 2011

1நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?

 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?!
மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .

 கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து  வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .
கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை  விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25  மணி நேரம் ஓடக்கூடிய 600  வீடியோ கிளிப்புகள் youtube  தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .
கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .
கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன




டிஸ்கி :பிளாக்கர்கள் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .பிளாக்கர்களின் மன நலனை கருத்தில் கொண்டு கூகுள் அத்தகவலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



2011 ஆம் ஆண்டின் உலகளவில் பிரபலமான 50 இணையதளங்கள்

 உலகளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள் உள்ளன நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே உள்ளன. கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தகவல்களை தரும் தளங்களே இறுதிவரை நிலைத்து வெற்றியும் பெறுகின்றன. இது போன்று உலகளவில் அனைவராலும் விரும்பப்பட்டு தர வரிசையில் முதல் ஐம்பது இடத்தை பெற்றுள்ள இணைய தளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் பாருங்கள்.

இதில் எப்பொழுதும் போல கூகுள் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வளர்ச்சி சென்ற வருடத்தை விட இந்த வருடம் குறைவாக தான் உள்ளது. ஆனால் பேஸ்புக் சிறப்பான வளர்ச்சியை தொடர்கிறது என்பது குறிப்பிட தக்கது. இணைய தளங்களில் ustream.tv என்ற வீடியோ பகிரும் தளம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த தளம் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 655% வளர்ச்சியை பெற்றுள்ளது.

The Top Websites for April 2011

RankWebsite NameUnique VisitorsYearly Change
1google.com150,132,536-0.34%
2facebook.com137,917,53913.33%
3yahoo.com137,281,8862.02%
4youtube.com123,404,30422.42%
5bing.com86,836,88648.43%
6wikipedia.org81,157,5916.01%
7amazon.com74,978,78012.71%
8msn.com73,799,2098.95%
9live.com72,369,4854.21%
10ebay.com67,372,294-10.04%
11blogspot.com65,940,74812.10%
12microsoft.com62,162,8359.19%
13craigslist.org57,500,250-5.52%
14ask.com54,508,628-10.72%
15go.com49,504,37217.32%
16about.com47,709,5623.88%
17aol.com46,906,6522.32%
18walmart.com46,349,56114.15%
19ehow.com45,960,70560.20%
20answers.com42,276,02538.03%
21mapquest.com36,700,156-9.61%
22target.com36,178,43124.64%
23weather.com33,728,42911.58%
24wordpress.com33,459,4731.92%
25netflix.com33,129,86952.15%
26myspace.com32,876,686-53.60%
27paypal.com31,870,57311.06%
28apple.com31,103,23710.79%
29adobe.com31,079,3633.17%
30twitter.com27,504,233-0.75%
31chase.com26,432,0795.86%
32att.com25,744,34412.12%
33bankofamerica.com25,671,4674.82%
34imdb.com23,787,667-2.86%
35groupon.com23,768,883655.82%
36cnn.com23,341,250-13.93%
37flickr.com21,514,439-13.68%
38photobucket.com20,523,415-23.97%
39comcast.net20,077,43657.38%
40bestbuy.com19,690,984-1.66%
41yellowpages.com19,683,71340.39%
42irs.gov19,682,366-4.02%
43jcpenney.com19,452,46233.94%
44sears.com19,348,83225.28%
45homedepot.com19,244,3613.58%
46verizonwireless.com18,440,06811.74%
47cnet.com18,405,154-13.40%
48comcast.com18,362,99260.51%
49wellsfargo.com17,984,17226.90%
50lowes.com17,949,68619.84%
                                             நன்றி
                            வந்தேமாதரம்.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கருப்பு பணத்தை மீட்டால் கரென்ட் பில் கட்டவேண்டாம் !

இந்தியாவிலிருந்து       வெளிநாடுகளில்   பதுக்கப் பட்டுள்ள   கறுப்புப் பணம்
ரூ 1,456 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது .இந்த பணம் முழுவதையும் மீட்டால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா



1 .உலக பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்
2 .இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி நிதியாக 60,000 கோடி வழங்கலாம் ஒவ்வொரு கிராமத்திற்கும் 100  கோடி வழங்கலாம்


3 .20  வருடங்களுக்கு யாரும் வரி செலுத்தவேண்டாம்
4 .பெட்ரோல் ,டீசல் ,மற்றும் பால் ஆகியவற்றை முறையே லிட்டருக்கு  ரூ  20,15,8 க்கு வழங்கலாம்
5 .இந்தியாவில் இனி யாரும் கரென்ட் பில் கட்ட வேண்டாம்
6 .சீனப் பெருஞ்சுவரை விட உறுதியாக இந்தியாவின் எல்கைகளை அமைக்கலாம்
7 .ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்திற்கு இணையாக 1500  பலகலைக் கழகங்களை புதிதாக நிர்மாணிக்கலாம்
8 .28,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதில் இற்றுப் போகாத ரப்பர் சாலைகள் அமைக்கலாம்
9 .சகல வசதிகளும் நிறைந்த 2000  மருத்துவ மனைகள் கட்டி இலவச மருத்துவ வசதியளிக்கலாம்


10  .இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கும்


                                               நன்றி 
                                            koodalbala

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



நீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்டுமா ?

 

நம்மில் சரியான பிறந்த தேதியை அறியாதவர்கள் பலர் உள்ளார்கள் .

ஆச்சரியமாக உள்ளதா ?விஷயம் இதுதான் .

முன்பெல்லாம் பிறந்த தேதிகளை பெரும்பாலும்  தமிழ் முறைப் படியே குறித்து வைத்திருப்பார்கள் .ஜாதகங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலத்தேதி இல்லாமலிருக்கும் .உதாரணமாக சித்திரை 12 ,ஆவணி 20  இதுபோல .


இதன் காரணமாக பலருக்கு தாங்கள் பிறந்த ஆங்கிலத்தேதி தெரியாமலேயே இருக்கும் .

இனி இவர்கள் கவலைப் படவேண்டியதில்லை .தமிழ்த் தேதியை கொண்டு ஆங்கிலத் தேதியை அறியவும் ஆங்கிலத் தேதி மூலமாக தமிழ் தேதியை அறியவும் முடியும் .

PROKERALA  என்னும் இணைய தளம் வாயிலாக நீங்கள் இந்த வசதியைப் பெறலாம் .இனி நீங்கள் தைரியமாக நீங்கள் பிறந்த தேதியை யாரிடமும் சொல்லலாம் .இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம் .




தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery  மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ்  கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
 
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .


ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

                                                      நன்றி
                                         koodalbala

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



அந்த நிகழ்ச்சி

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள்.
அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில்
காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி
நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த
நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும்
செந்திலும்' என பதில்
சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா
இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு
முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன்
இவர்கள் இந்தப்பணத்தை
நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா?
அவர்களின் நோக்கம் என்ன? இதன்
பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில்
கண்டுபிடிக்கக் கூடியதாகவும்,
உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே
அமைகின்றன. அதற்குக்
காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட
வேண்டும் என்ற
உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல.
அது ஒரு சர்வர்.
தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை
வெயிட்டிங் லிஸ்டில் காக்க
வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்)
ஒன்றரை மணிநேரம்
நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக
தமிழர்களே ஏமாந்து
கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள்.
பேசுபவர்கள் உண்மையில்
ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில்
காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக்
கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ
ஆள்தான் ) நிகழ்ச்சி
முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள்
திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட
நமது பேலன்ஸ்
தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு
செய்யப்பட நிகழ்க்சி.
அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு
நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத்
தவிருங்கள். உங்களுக்குத்
தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை
நாய்களுக்கு வேட்டு
வையுங்கள்.



                                         நன்றி
                            puthiyathalaimurai

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்