Sunday 4 August 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்....யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு !

கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.(www.eltf.in )

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவர்களே தேடிவந்து உதவிகள் செய்து தருகிறார்கள்.


கல்வி கற்க இனி என்ன கவலை !

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்