Friday 31 August 2012

உங்க ஊரு நியாய விலை கடை


உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..
அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.
உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.
#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

உங்க கடை எண்ணும்,மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.#படத்தை பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கண் தானம் செய்ய எஸ்.எம்.எஸ். போதும்


ஒரு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும், கண் தானத்துக்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துச் செய்கிறது ஓர் அமைப்பு

வாழும்வரை கண்களை தானம் பெற்றுக் கொடுங்கள்’ என்ற வாசகத்துடன் கண் தான விழிப்புணர்வு பற்றி எளிமையான பிரசாரத்தை துவக்கியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த நயனஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயராமன். ‘கண் தானத்தின் அவசியம் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்பொழுது, எதுவும் செய்ய வேண்டாம், வாழும்வரை கண்களை தானமாக பெற்றுத் தருகிறோம். வாழ்ந்த பிறகு கண்களை தானமாகத் தருகிறோம் என்ற உறுதி மொழியை எடுத்துக்கொண்டு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள் போதும், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிரசாரத்தை துவங்கியிருக்கும் ஜெயராமனிடம் அதுகுறித்துக் கேட்டோம்.

"ரோட்டரி கிளப் உதவியுடன் கண் தான விழிப்புணர்வு குறித்த பல நிகழ்ச்சிகளில்பங்கு கொண்டிருக்கிறேன். இந்த நாட்டின் பிரஜையாக ஏதாவது செய்ய வேண்டும். கண்தானம் பற்றிய விழிப்புணர்வையே முழு வீச்சில்செய்யலாமே என்று செயலில் இறங்கினேன். கண் தான அவசியம் குறித்து அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியாவில் 500 கண் வங்கிகள் உள்ளன. 15 லட்சம் பேர் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால், பார்வைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள். மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம் இவர்களுக்கு பார்வை தர முடியும். குறைந்தது ஆண்டிற்கு ஒரு லட்சம் கண்கள் தேவை. நம்மிடம் மாற்றுக் கண் அறுவைச் சிகிச்சை செய்ய அந்தளவிற்கே டாக்டர்கள் இருக்கிறார்கள். சென்ற ஆண்டு மட்டும் 75 லட்சம் பேர் கண் தானம் செய்திருக்க முடியும். அவர்களிடமிருந்து 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? 500 வங்கிகளும் சேர்த்து 40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. அதிலும் மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது வெறும் 15 ஆயிரம் கண்கள் மட்டுமே. கண் வங்கியை தொடர்புகொண்டு எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டபோதும் அதிகபட்சம் 4 ஆயிரம் பேர் என்ற தகவலும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கை எத்தனை குட்டியான நாடு. அங்கிருந்து ஆண்டிற்கு 50 ஆயிரம் கண்கள் ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால், நம்மால் ஏன் முடியவில்லை என்று யோசித்தபோதுதான் பழைய முறையையே பின்பற்றுவதைவிட இன்னும் எளிமையாக, புதுமையாகச் செய்தால் நிறையப் பேர் கண் தானம் செய்யவும் கண்களை பெற்றுத் தரவும் முன் வருவார்கள் என்று தோன்றியது. விளைவு, குறுஞ்செய்தி சேவையை ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்துப் பேசினேன். 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணை இதில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்துள்ளார்கள். இதன்படி, கண் தானம் செய்ய விரும்புபவர் 108ஐ தொடர்புகொண்டால், அவர்கள் அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவார்கள். மருத்துவக் குழுவினர் வந்து கண்களை பெற்றுக்கொள்வார்கள். தவிர, கண் தானம் செய்ய விரும்புபவர்கள் EYE என்று டைப் செய்து தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து 99443 13131 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் போதும், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார் ஜெயராமன்.

நாடு முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்தவும் உள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு நயனஜோதி டிரஸ்ட்: 9845143650

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 28 August 2012

பேரறிஞர் அண்ணா

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday 23 August 2012

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது.

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது….


"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே 
இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ......

அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும் இணைத்து கொடுப்பவர்
"அம்மா "
-அதனால் தான் " அம்மா " என்கிறோம்....
ஆனால் இன்று பலர் மம்மி என்று அழைப்பதை தான்
விரும்புகிறார்கள்

" மம்மி" என்றால் பதப்படுத்த பட்ட " பிணம் " என்று பொருள் .....
உயிரும் உடலும் தந்தவளை உயிரோடு பதப்படுத்தாமல் உயிர் வரை இனிக்கும் தமிழில் மெய்யான அன்பால் "அம்மா" " அம்மா " என்று அழையுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்