நண்பர்களே.! இதைக் கண்டிப்பாக இரண்டு நிமிடம் ஒதுக்கிப் படிக்கவும்.
குறிப்பாகப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புகார் எண்: 044-25353999
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் குறித்து
இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)
அரக்கோணம்- கடற்கரை, தாம்பரம்- கடற்கரை, வேளச்சேரி- கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை
மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெண்
போலீசார் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர்
கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் 'ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் புகார் செய்ய உதவி
மையம் 24
மணி நேரமும் செயல்படுகிறது.
இந்த புகார் மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் இருப்பார்கள். அதற்குப்பிறகு
கட்டுப்பாட்டு அறை போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு
கொண்டு பயணத்தின்போது தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்'
என்று
கூறியுள்ளார்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment