Sunday 6 May 2012

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் ?

1) நாடாளமன்ற உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம், அது போக தினப்படியாக 2,000 ரூபாய் நாடாளமன்ற கூட்டம் நடைபெறும்போது.

2) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் வருடத்திற்கு 34 தடவை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம், அவருடன், அவரது மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாக அழைத்துச் செல்லலாம்!. உடன் செல்பவர்கள் வருடத்திற்கு 8 முறை அவரை காண தனியாக இலவசமாக செல்ல முடியும், செல்லும் போது, அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது, இந்தியாவிற்குள் சென்றால் ரயிலில் குளிர் சாதன முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானத்தில் முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.

3) ஒரு நாடாளமன்ற உறுப்பினர் 3 தொலைபேசி இணைப்பை இலவசமாக பெறலாம்,மாத வாடகை, பொருத்தும் கட்டணங்கள் அனைத்தும் இலவசம்! அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம் இலவசம்! 4,000 KS குடி தண்ணீர் இலவசம்!.

4) மத்திய அரசின் மருத்துவ திட்டதின் படி மாதம் ஐநூறு ரூபாய் செலுத்திவிட்டு, அவர், அவரின் மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என இலவசமாக யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்!.

5) ஒவ்வொரு நாடாள மன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி நிதியாக 45,000 ரூபாய் வழங்கப்படுகின்றது .

6) ஒரு நாடாளமன்ற உறுப்பினர், அலுவலக பணிகளின் செலவுக்காக மாதம் மட்டும் 45,000 ரூபாய் ஒதுக்கப்படுகின்றது, இதில் அவர் பென்சில், பேனா, பேப்பர் வாங்கிக்கொள்ள மட்டும் மாதம் 15,000 ரூபாயை பயன்படுத்திக்கொள்ளலாம்! மீதமுள்ள தொகையை பிற அலுவலக செலவுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.

7) ஒரு நபர் ஒரு முறை நாடாள மன்ற உறுப்பினர் ஆகிவிட்டால், அவருக்கு ஓய்வூதியமாக மாதம் 20,000 ரூபாய் கிடைக்கும், அவரே ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் கூடுதலாக 1,500 ரூபாய் கிடைக்கும்!.

இவை அத்தனையும் நீங்களும் கட்டும் வரிப்பணத்தில் !

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment