Friday 16 November 2012

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....

உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்.....
...
என்னப்பா இது கரென்ட் இல்லை, இன்வெர்ட்ட்டர் பால் இல்லாத குழந்தை போல கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்க
ு ஒரு குட் நியூஸ், நிறைய தண்ணி குடிச்சா இனிமே நிறைய கரென்ட் கிடைக்கும்....ஒரே கொய்ப்பமா கீதா - நைஜீரியா டீன் ஏஜ் பொன்னுகள் எல்லாம் சேர்ந்து இப்ப நம்ம நார்மல் ஜெனரேட்டருக்கு தேவையான பெட்ரோல், டீஸல் அல்லது கெரசின் இல்லாம ஒரு மாற்றும் எரி பொருள் அதாவது சிறுநீர் கழித்தாலே போதும்னு நிருபிச்சி இருக்காங்க, இதன் செயல்முறை விளகத்தை பார்ப்போம். ஒரு லிட்டர் சிறுநீர் 6 மணி நேர ஓடும். முதல்ல உச்சா போன டேங்கை ஒரு எலக்ட்ரோடிக் ஷெல் மூலமா பாஸ் பண்ணனும். அங்கே அது ஹைட்ரஜனை நீக்கி இன்னும் ஒரு சேம்பருக்கு சுத்தகரிப்புக்காக செல்லும். அங்கிருந்து படத்தில் உள்ள பச்சை சிலின்டருக்குள் செலுத்தபட்டு அந்த சிலின்டரில் இருக்கும் போராக்ஸ் சிறுநீரில் உள்ள ஈரப்பசையை நீக்கி அது டெஸ்லா - டாஸ்டிக் மின்சாராமாக வெடித்து அது ஜெனேரட்டருக்குள் செல்லும். இது ஒரு லோக்கல் பாம் போல் தான் இப்போது எந்த வித வால்வுகளும் இல்லாமல் செயல்ப்டுகிறது ஆனால் இது வே பாதுகாப்பாக செய்யும் தூரம் வெகுதூரத்தில் இல்லை. நானும் இதே போல் மாற்று எரி பொருள் கொண்ட ஜெனரேட்டரை "கண்டிப்பாக" அடுத்த வாரம் லான்ச் செய்கிறேன். ஏற்கனவே பசங்க படிக்கலைனா அந்த பொன்னுதை வாங்கி குடின்னு பெற்றோர் சொல்லி டார்ச்சர் பன்றாங்க இதுல 14 - 15 வயசு பொன்னுங்க இதை வேற கண்டுபிடிச்சிட்டாங்க பசங்களா உங்களுக்கு டைம் சரியில்லை... சரி எல்லாம் கேனை ரெடி பன்னிக்கோங்க ஸ்டார்ட் உச்சா இனிமே ஒழுங்க உச்சா போககூட துப்பில்லை நீயெல்லாம் ஒரு புருஷனா, நீயெல்லாம் ஒரு பிள்ளையாடான்னு எல்லார் வீட்டிலேயும் ஏன்டா பீரை குடிச்சு அதை ஒழுங்கா பொறுப்பா வீட்ல வந்து உச்சா போனும்னு தெரியாதா - எனக்கு பெத்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லைனு குரல் கேட்க போகுது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment