Wednesday 6 February 2013

பொது அறிவு-2


1.மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

2.எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

3.ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

4.பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

5.கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.

6.ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.

7.ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

8.இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா.

9.ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால், மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.

10.ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

11.இந்தியா, பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.

12.நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

13.லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

14.நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.

15.கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி டாரண்டுலாவாகும்.

16.ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.

17.காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.

18.காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment