Thursday 7 February 2013

பெண்களைப் பாதுகாக்க லேடீஸ் சேப்டி ஷாக்கர்


பெண்களைப் பாதுகாக்க லேடீஸ் சேப்டி ஷாக்கர்

தமிழகத்தின், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் (20), பரத்கிரண் (20).


டெல்லியில் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய கருவியை கண்டுபிடிக்க இம்மாணவர்கள் தீர்மானித்தனர்.

இதன்படி, 15 நாட்கள் கடுமையாக முயற்சித்து கருவியொன்றை செய்துள்ளனர்.

இதற்கு லேடீஸ் சேப்டி ஷாக்கர்என பெயரிட்டுள்ளனர்.60 கிராம் எடையுள்ள இக்கருவியை பெண்கள் தலையில் கிளிப் போல் மாட்டிக் கொள்ளலாம்.

குடை, கீசெயின், செல்போன் பவுச் ஆகியவற்றிலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த கருவியில் 3 பேட்டரிகள் உள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்.

இந்த கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால் அபாய ஒலி எழுப்பும். இந்த ஒலி சுமார் 20 மீட்டர் தூரம் கேட்கும். கருவியை எதிரியின் உடலில் படும்படிவைத்து 2வது பட்டனை அழுத்தினால், அவர் மீது 1,700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும்.

இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவார். ஆனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment