Sunday 10 February 2013

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!


பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!


பேஸ்புக்கை 5 மாதங்கள் உபயோகிக்காமல் இருக்கும் பொருட்டு தனது மகளுக்கு 200 அமெரிக்க டொலர்களை வழங்கிய தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வெலஸ்லீ சேர்ந்த போல் பெய்ர் என்ற நபரே பேஸ்புக் பாவனையை 5 மாதங்களுக்கு தனது மகளான ரெச்செலுக்கு பணத்தை வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக தந்தையும், மகளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.இவ் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 200 அமெரிக்க டொலர்களாகும்.



இதன்படி ரெச்செல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை பேஸ்புக்கினை உபயோகிக்காமல் இருப்பதன் மூலம் 50 அமெரிக்க டொலர்களை பெறுவார்.

மேலும் ஜூன்மாதம் 26 ஆம் திகதி மிகுதித்தொகையான 150 அமெரிக்க டொலர்களையும் பெறுவார்.
மேலும் ஒப்பந்தத்திற்கு முரணாக பேஸ்புக்கில் ரெச்செல் நுழையாமல் இருப்பதற்காக அதன் கடவுச்சொல்லை தந்தைக்கு வழங்கவேண்டும். அதனையும் அவர் வழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பேஸ்புக்கிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க 70 அமெரிக்க டொலர்களை தந்தையிடம் கேட்டிருந்த ரெச்சல் பின்னர் அத்தொகையினை 200 அமெரிக்க டொலர்களாக உயர்த்தியுள்ளார்.

ரெச்செலின் தந்தையான போல் பெய்ரும் இவ் ஒப்பந்தத்தால் மகிழ்சியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment