Wednesday 14 December 2011

புற்றுநோயை விரட்டும் பப்பாளி. நோய்க்கு நோ என்ட்ரி


புற்றுநோயை விரட்டும் பப்பாளி. நோய்க்கு நோ என்ட்ரி

எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தியுள்ள பப்பாளி, நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிடும்.
இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளிப் பழம்

வருடம் முழுவதும் கிடைக்கும் பழம் பப்பாளி. ஆனால், பலரும் இந்தப் பழத்தை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை!

உண்மையில், பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறது.

பல் தொடர்பான குறைபாடுகளை தீர்ப்பதிலும், சிறுநீரக கல்லை கரைப்பதிலும் பப்பாளி கில்லாடி.

நரம்புகளை பலமாக்குவதுடன், ரத்த உற்பத்தியை அதிகரிப்பதிலும், ஞாபக சக்தியை பெருக்குவதிலும் பப்பாளிக்கு நிகர் பப்பாளியே.

மாதவிடாய் குறைபாடுள்ள பெண்கள், இந்தப் பழத்திடம் சரணடைந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தியுள்ள பப்பாளி, நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிடும்
                                

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment