Wednesday 5 September 2012

தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல்


குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடுதல் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பல நேரங்களில் பெயர்களை தேடி அலையும் நிலை வந்துவிடுகிறது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீனம் இப்போது அவசியமாகிவிட்டாலும், இன்னும் தாய் மொழி பற்று தவறிவிடவில்லை.

என் உறவினர் ஒருவரின் பெயர் இமையன். நெடுங்காலமாக அந்த பெயர் சொல்லி தான் அழைப்போம். பிறகு ஒருநாளில் தெரிந்தது அது இமயவரம்ப நெடுசேரலாதன் எனும் பெரும்பெயரின் சுருக்கம் என்று. வியப்புதான். இத்தனை பெரும் பெயரை கொண்டு அவர் இயங்குவது. இது போல பெரும் நீளமான பெயர்களை இப்போது மக்கள் விரும்புவதில்லை. பாஸ்போட் போன்ற விண்ணப்ப படிவங்களில் அதிகபட்சம் 13 எழுத்துகளே பெயருக்காக தரப்படுகின்றன. அயல்நாடுகளில் இருக்கும் பெயருக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இவைகளுக்கு ஏனோ நாமும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அழகாகவும், சிறியதாகவும், கருத்தாளம் மிக்கதாகவும் வைக்க விரும்புகின்றவர்களுக்காக நிறைய புத்தகங்கள் வருகின்றன. பலவற்றில் சிறப்பான பெயர்கள் எதுவும் இருப்பதில்லை என்ற போதும், எளிய விலையில் கிடைக்கின்ற என்பதற்காக நாம் வாங்குகிறோம். அந்தக் கவலை இந்த புத்தகத்தில் இல்லைஆண்களுக்கான பெயர்கள், பெண்களுக்கான பெயர்கள் என தனித்தனியாக உள்ளன.

அத்துடன் வாகணங்களுக்கு தமிழக அரசு விதிப்படி தமிழிலிலேயே எண்களை எழுதலாம் போன்றவைகளும்,. வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்வைக்க ஆலோசனையும் சொல்லப்பட்டுள்ளது.





ஆசிரியரை தொடர்பு கொள்ள -

மா.தமிழ்ப்பரிதி
9382854321
tparithi@gmail.com

நன்றி,.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



1 comment:

  1. எங்கள் தளத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete