Saturday 27 October 2012

பழமொழிகள்--2


பழமொழிகள்

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்

அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோசம்.
- ஸ்டேபிள்.

சிறப்பான வழியைத் தேர்வு செய்யுங்கள். அது நீங்கள் பெற விரும்பியதைப் பெற்றுத் தரும்.
- ஷீல்லர்.

பாமர மக்களின் நிலையே ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையாகும்.
- வில்லியம் தர்ஸ்டன்.

உதவியின் மதிப்பு என்பது உதவுகின்றவன் மதிப்பளவே ஆகும்.
- டென்னிசன்.

அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ தோழமையை வளர்க்கிறது.
- பிளாட்டோ.

அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.
- ஜோதைன்ஸ்வீப்ட்.

உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.
- ராபர்ட் ஷீல்லர்.

சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களே சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.
- கோல்டுஸ்மித்.

அறிவாளிகள் பணத்திற்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி.

வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.
- பெர்ஸியஸ்.

ஒருவனிடம் அச்சம் கொண்டால், அவனிடம் அன்பு கொள்ள முடியாது.
- அரிஸ்டாட்டில்.

ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிப்பது போலாகும்.
- டெமாஸ்தனிஸ்.

சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.
- புத்தர்.

பொய்க்கல்வி பெருமை பேசும். உண்மை அறிவு தன்னடக்கம் சொல்லும்.
- ரஸ்கின்.

கஷ்டத்தோடு போராடுபவனுக்கு நன்மை எது என்று தெரியாது.
- ஹாப்பர்டு.

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- அரோன்புர்.

எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமையானது.
- ஹிட்லர்.

வல்லமை அல்லாத நீதி ஆற்றல் அற்றது. நீதி இல்லாத வலிமை கொடுங்கோன்மை.
- பேஸ்டீஸ்.

பண்போடு பொருந்தாத அனுதாபமெல்லாம் மறைமுகமான தன்னலமே.
- கால்ரிட்ஜ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment