போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்- சீனாவில் தூள் கிளப்பும் புதிய திட்டம்!
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது சீனாவின் செங்டு நகர நிர்வாகம். ''மக்கள் தனித்தனி கார்களில் தினமும் அலுவலத்துக்கும், வியாபாரத்திற்கும் சென்றுவருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் விரையமாவதைத் தடுக்கத்தான் இந்த நடவடிக்கை. இனி மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களுக்கும் சலுகைகள் உண்டு. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அமலில் இருக்கும்" என அறிவித்திருக்கிறது செங்டு நகர நிர்வாகம்!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment